தமிழ்த்துறை முப்பெரும் விழா-2018

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி, இராஜபாளையம்.
தமிழ்த்துறை
முப்பெரும் விழா
(பாரதி இலக்கிய மன்றம், மாணவர் வாசகர் வட்டம், அரசுப்பணிக்கான தகுதித்தேர்வு சான்றிதழ் வகுப்பு – தொடக்கவிழா)

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் 02.07.2018 அன்று பாரதி இலக்கிய மன்றம், மாணவர் வாசகர் வட்டம், அரசுப்பணிக்கான தகுதித்தேர்வு சான்றிதழ் வகுப்பு ஆகியவற்றின் தொடக்க விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.கலாவதி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர் வே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். பொருளாதாரத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.சிதம்பரநாதன் மற்றும் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கே.ரமேஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அப்பொழுது நூல்களை எவ்வாறு வாசிக்க வேண்டும், வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள், எந்த வகையான இலக்கியங்களை வாசிக்கலாம் போன்ற கருத்துக்களை வழங்கினர். மேலும் அரசுப்பணிக்கான தேர்வுகளை எவ்விதம் அணுக வேண்டும், அதற்குத் தங்களைத் தயார் செய்வது எப்படி என்பது குறித்தும் பேசினர். நிறைவாக பேரா க.கந்தசாமி பாண்டியன் நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள்  பொ.இராஜூ, க.வாணிதேவி, ஜீ.பாண்டியலட்சுமி, ச.மைதிலிராஜ், இரா.இராஜமார்த்தாண்டன், இரா.விஷ்ணுபிரியா, எஸ்.லலிதாம்பிகை ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *