செயல்முறைப் பயிற்சி-ஸ்ரீசத்ய சாய் பேரிடர்மேலாண்மை மீட்புக் குழுவினர் -நாட்டுநலப்பணி

சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட முகாமின் ஒரு நிகழ்வாக ஸ்ரீசத்ய சாய் பேரிடர்மேலாண்மை மீட்புக் குழுவினர் திரு சுரேஷ் அவர்கள் தலைமையில் மாணவர்களுக்கு வகுப்பும், செயல்முறைப் பயிற்சியும் அளித்தனர். அதில் வெள்ளக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்விதம் காப்பாற்றுவது மற்றும் தீ பாதித்த பகுதிகளில் எவ்விதம் அதைக் கட்டுப்படுத்துவது போன்ற விளக்கங்களை அளித்தனர். இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பின்னர் இராஜபாளையம் மகப்பேறு மருத்துவர் உமாமகேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் குறித்து விளக்கிப்பேசினார். குமார் தையல் பயிற்சிப் பள்ளியின் திரு ஏ.முத்துக்குமார் அவர்களும் தளவாய்புரம் சோபியா, ஸ்நேகா கார்மெண்ட்ஸின் உரிமையாளர் திரு செல்லத்துரை அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சுயதொழில் தையல் பயிற்சி குறித்து கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்களிடம் பேசினர். மாலையில் கல்லூரி ஆட்சிமன்றக்குழுத் தலைவர் முனைவர் எஸ்.சிங்கராஜ், ஆட்சிமன்றக்குழுச் செயலர் திரு பி.ஆர்.விஜயராகவன் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர். அப்போழுது நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் க.கந்தசாமி பாண்டியன் வரவேற்றார். திரு போ.கந்தசாமி நன்றி கூறினார். மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் விதமாக உடல்திறன், அறிவு, செயல்பாடு உள்ளிட்ட மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பதினைந்து போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதில் தனிநபர் ஓட்டம், தொடர் ஓட்டம், மேற்கத்திய நடனம் மற்றும் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இதில் ஸ்மார்ட்போனால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர். நிறைவாக சமூக விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *