செந்தமிழ் விழா – 2019-தமிழ்த்துறை-11.04.2019

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் செந்தமிழ் விழா – 2019 என்னும் நிகழ்வு நடைபெற்றது. சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர் வே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.வெங்கடேஸ்வரன் முன்னிலையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.கலாவதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிவகாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சே.கிளிராஜ் அவர்கள் ‘புதுக்கவிதையில் இலக்கண மரபு’ என்னும் தலைப்பிலும் இராஜுக்கள் கல்லூரி பொருளாதாரத்துறைத் தலைவர் முனைவர் சொ.சிதம்பரநாதன் அவர்கள் ‘சமயமும் தமிழும்’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் மாலை நடைபெற்ற விழாவில் தமிழ்த்துறை மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கல்லூரி ஆட்சிமன்றக்குழுச் செயலர் திரு பி.ஆர்.விஜயராகவன் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பேரா. பொ.இராஜு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *