ஐராவதம் மகாதேவன் மற்றும் அதியமான் ஆகிய இருவருக்கும் நினைவேந்தல் கூட்டம்- முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம்-25.01.2019

இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மறைந்த கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன் மற்றும் தஞ்சைப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் அதியமான் ஆகிய இருவருக்கும் நினைவேந்தல் கூட்டம் கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர். முனைவர் போ. கந்தசாமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர். வே. வெங்கட்ராமன் கடல்சார் தொல்லியியலில் அதியமானின் பங்களிப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார். வரலாற்றுத்துறை தலைவர் முனைவர். த. வெங்கடேஸ்வரன் கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் வே. வெங்கட்ராமன் கூறியதாவது:-சோழர்காலத்தில் நடந்த வணிகத்தைப்பற்றியும் கடல் அகழ்வாய்வில் அதியமானின் பெருமையையும் எடுத்துக்கூறினார். ரோமானியக் கப்பல் முலம் ரோமானிய நங்கூரம் கொண்டுவரப்பட்டு சோழர்காலத்தில் பயன்படுத்தப்பட்டதை ஆய்வின் முலம் வெளிக்கொண்டு வந்து வட இந்தியர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். பூம்புகார்இ நாகப்பட்டினம்இ தொண்டிஇ முசுறி போன்ற கடல் பகுதிகளில் நடந்த ஆய்வில் 6 வகையான நங்கூரங்கள் (இரும்பு மற்றும் உலோகம்) கண்டுபிடிக்கப்பட்டது. இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடல் அகழ்வாய்வில் ஈடுபட்டு வணிகம் நடந்ததற்கான அடையாளத்தை வெளிப்படுத்தினார். கி.மு. 300 முதல் கி.பி. 1400 வரை கடல் அகழ்வாய்வில் ஈடுபட்டு பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வெளியிட்டு கடல் அகழ்வாய்வில் சாதனை படைத்தவர் அதியமான் என்று கூறினார். வரலாற்றுத்துறைத் தலைவர். த. வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- 40 ஆண்டுகளுக்கு மேலாக தனது கல்வெட்டு ஆய்வுப்பணியில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர் ஐராவதம் மகாதேவன் என்றும் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை உலகிற்கு தெரியப்படுத்திய பெருமை இவரைச்சாரும். தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். சிந்து சமவெளி எழுத்தின் முன்னோடி தமிழ் என்ற நோக்கில் ஆய்வை மேற்கொண்டவர் தனது கல்வெட்டுப்பணியில் தமிழ் பிராமி எழுத்துடைய புகழுர் கல்வெட்டுஇ மாங்குளம் கல்வெட்டு சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பழங்கால கல்வெட்டுகளை படியெடுத்து கல்வெட்டு துறைக்கு வித்திட்டவர். பானை ஓடுகளில் குறியீடுகள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கு பொருள் விளக்கம் தந்தவர் ஐராவதம் மகாதேவன் ஆவார். முடிவில் இரண்டாமாண்டு முதுகலை வரலாற்று மாணவி மு. உதயலட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்வினை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ஜெகந்நாத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முனைவர் மு. ரமேஷ்குமார், னு. எபிஜேம்ஸ், சு. சக்திவேல்,  P.R. ராம்ஜி மற்றும் டீ. ஸ்ரீலட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *