ஏழு நாள் சிறப்பு முகாம்-நாட்டுநலப்பணித் திட்டம்-27.12.2018-29.12.2018

27.12.2018 அன்று அதிகாலை மாணவர்களுக்கான ஓட்டப்போட்டி மற்றும் மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. காலை 10.00 மணி அளவில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இராஜபாளையம் ரத்த வங்கி துணை மருத்துவர் டாக்டர் விஜயபெருமாள் தலைமையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர். இம்முகாமில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் க.கந்தசாமி பாண்டியன் உள்ளிட்ட 20 மாணவர்கள் இரத்ததானம் செய்தனர். மேலும் காலையில் பழனியப்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுத்தம்செய்யும் பணி நடைபெற்றது. மதியம் இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் அமைப்பினைச் சேர்ந்த செல்வகுமார், சரவணன் சோழபுரம் துளிர் சமூகசேவைக் குழுவினைச் சேர்ந்த செல்வகிருஷ்ணன், மாரியப்பன், ஏர்செல் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் சமூக சேவை குறித்த விழிப்புணர்வு குறித்துப் பேசினர். பின்னர் ஆர.வி.ரேகா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேகர், இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் வி.கலாவதி, முனைவர் முத்துலட்சுமி, மஞ்சுளா காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர். மாலையில் இராஜூக்கள் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா. சுரேஷ்தளியத் தலைமையில் மனித வாழ்வில் மேன்மை தருவது பணமா கல்வியா என்னும் தலைப்பில் மாணவர்கள் கலந்துகொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. இராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் முனைவர் ரமேஷ்குமார், பேரா. சக்திவேல், இராஜபாளையம் துளி பவுண்டேசன் அமைப்பினைச் சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இரவு இராஜூக்கள் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெங்கடேஸ்வரன் அவர்களின் முறைப்படுத்துதலின் படி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் நான்கு அணிகள் கலந்துகொண்டன. பின்னர் மாணவர்களின் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முகாமின் ஆறாம் நாளான 28.12.2018 அன்று காலையில் சோழபுரம் மில்கேட் மற்றும் மவுண்ட்சியோன் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் டெங்கு, பிளாஸ்டிக், தூய்மை இந்தியா திட்டம், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பின்னர் வண்டிமாகாளியம்மன் கோவில் வளாகத்தைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. மாலை இராஜூக்கள் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் மகேஸ்வரன், முனைவர் பாண்டியலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இரவு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
29.12.2018 அன்று காலை 11.00 மணி அளவில் முகாமில் நிறைவு விழா நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் போ.கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர் வே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். பழனியப்பா மேல்நிலைப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் முனைவர் அருணாசலம் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் எபிஜேம்ஸ் முகாமின் அறிக்கையை வாசித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இந்நிறைவு விழாவில் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் நடத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் க.கந்தசாமி பாண்டியன் தொகுத்து வழங்கினார். முகாம் இனிதே நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *