இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி மாதிரி வாக்குச்சாவடி மையம்-நாட்டுநலப்பணி திட்டம்-09.04.2019

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இராஜபாளையம் சட்டமன்றத் தேர்தல் பிரிவும் இணைந்து கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. விஜயா அவர்கள், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு. ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாக்குரிமையின் அவசியத்தையும் வாக்களிக்கும் முறைகளையும் எடுத்துக்கூறினார்கள். மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குரிமை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது வாக்கினை எவ்வாறு பதிவு செய்வது என்பதை தெரிந்துகொண்டு வாக்களித்தனர்.  கல்லூரி முதல்வர் முதுமுனைவர் வே. வெங்கட்ராமன் அவர்கள் வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் மாணவர்கள் அனைவரும் தேர்தல் அன்று வாக்களிக்க வேண்டும் என்றும்  விளக்கிக்கூறினார். துணை முதல்வர் த. வெங்கடேஸ்வரன் அவர்கள் மாதிரி வாக்கினை பதிவு செய்து அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.  வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக பணிநியமனம் பெற்ற பேராசிரிய, பேராசிரியைகள் மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல்  அலுவலர்களாக பங்கு பெற்று தங்களது சந்தேகங்களில் தெளிவடைந்தனர். மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பொறுப்பினை  துணை வட்டாட்சியர் – தேர்தல் பிரிவு பாலகிருஷ்ணன், அயன்கொல்லங்கொண்டான் வருவாய் அலுவலர் புஷ்பாவதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரி முனைவர் போ. கந்தசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *